Lyric Special…..

July 2, 2009

விழியிலே என் விழியிலே…

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 5:05 am
Tags: , ,

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே

கண்ணங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதோ

நான் என்னைக் காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணிர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
இரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேன்
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உயிரையும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது இன்று சருகானது
என் உள் நெஞ்சம் வலிக்கின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா…

விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே….

Advertisements

September 25, 2012

பேசுகிறேன் பேசுகிறேன்

Filed under: Uncategorized — Ss @ 6:48 pm

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதே
மனம் அல்லவா

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா
அடங்காமலே அலை பாய்வதே
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதே
மனம் அல்லவா

November 3, 2010

நானும் நீயும்…

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 10:36 am
Tags: ,

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா  கொஞ்சம் நட்சத்திரம் அள்ளி தருவேன்
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலை இல்லே
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ளே
பறவைகள் பறந்திட சொல்லி தர தேவை இல்லே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமையா
வீசும் காதும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ளே

நாம நெனைச்சது நடந்துச்சி நல்ல படி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவேன்
நாம கேட்டதும் கிடைசிட்ட வாழ்கைய தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்
அட ஒன்னும் இல்லே
வாழ்க்கை கஷ்டம் இல்லே
அத நெனைச்சாலே போதும் புள்ளே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ளே

தெரு கோடியில் கெடந்த வாழ்க்கையும் தான்
இப்போ கோடியில் பொரளுதடா
இந்த பூமிய கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா
காதல் தானே மாற்றம்
நம்ம உயர தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு
வாழ்கை சுத்தும் பூவு
உன்ன கொண்டாடி போகும் புள்ளே

 

 

October 10, 2010

எந்தன் உயிரே. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 6:40 pm
Tags: , ,

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே உயிரிலே பூத்ததே
உன்னருகில் நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

 

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன்
என்னை தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்

அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை

சின்ன சின்ன கூத்து
நீ செய்யிறதை பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்

வண்ண வண்ணப் பாதம்
நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நானிருப்பேன்

கவலைகள் மறக்கவே
கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகில் நானிருந்தால்

 

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை
நிற்க வைத்து அடையாளம் நீ கொடுத்தாய்

உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேளி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சி
புத்தும் புதுத் தூண்டில்
போட்டது நீயல்லவா

கள்ளத்தனம் இல்லா
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா

உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் நொடியில்
உன்னருகே நானிருந்தால்
தினம் உன்னருகே நானிருந்தால்

 

October 2, 2010

இறகை போலே. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 5:19 pm

இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்,
அநியாய காதல் வந்ததே,
அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ
மின்னல் போலே தொட்டு சென்றதே…

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்,
எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை,
நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிறபதும்,
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்,
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே,
வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே
பூமி பந்து சுத்துதே.

ஏய் என்னானதோ, ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே,
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூறல் நெஞ்சில் சிந்துதே…

September 16, 2010

ஈர நிலா விழிகளை. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 7:38 pm

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்

தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு
சேரும் நதி ரெண்டுதான் பாதை இனி ஒன்று தான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

September 3, 2010

சந்தன பூங்காற்றே. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 6:26 pm
Tags: , ,

சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே
என் இளமையின் கனவினை திமிரென உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை சிறையிட நினைத்தது யார்
நான் எல்லை தாண்டிவிடவில்லை கூண்டுக்குள்ளும் இல்லை
பூப்போலே திறந்து நதி போல துளி திரிந்து
தினம் தென்றல் போல வாழ்ந்தால் ஆனந்தம்

எனக்கொரு ஆசை உனக்கொரு ஆசை
உதடுக்கு உதடு புது புது பாஷை
குற்றம் என்றே இதை சொல்வாயோ..
அலைகள் வேறு கரைகள் வேறு
கூண்டுகள் வேறு கூடுகள் வேறு
இரெண்டும் ஒன்றே என்று சொல்வாயோ..
புரியும் வரைதான் மனதின் மயக்கம்
சரியா!!!!தவறா!!!! என்று ஏங்காதே
தவறே ஒரு நாள் சரியாய் தெரியும்
வாழ்க்கை இதுதான் அலைபாயாதே
நான் தேடும் உலகு அது மாறுபட்ட அழகு
பொன்வானின் அளவு என் அந்தரங்க கனவு

பனிவிழும் பார்வை பரம்பரை நாணம்
தணிந்திடும் கோபம் திருமண ஆசை
பெண்ணில் எல்லாம் இதை பார்த்தேன்
இலக்கணம் இல்லா இலக்கியம் நானே
விழிகளுக்கெல்லாம் அதிசயமானேன்
மௌனத்தில் நானே இசை கேட்பேனே
உறவில் கலந்து கருவை சுமந்து
உயிரை படைக்கும் பெண்கள் தெய்வங்களே
கோவிலும் வேண்டாம் சிறைகளும் வேண்டாம்
பெண்ணை பெண்ணாய் கொஞ்சம் பாருங்களேன்
ஓர் நாளே இருக்கும் சிறு பூவும் வண்டை மணக்கும்
உள்ளங்கள் கலந்தால் வாழ்வில் அர்த்தம் இருக்கும்

சந்தன பூங்காற்றே சந்தன பூங்காற்றே
நன் இயக்கிட வந்தது திரைப்பட உலகத்திலே
நன் எழுதிய திரைக்கதை ஜெயித்தது நிஜத்தினிலே
ஒரு பொய்யில் வெற்றி அடைந்தாலும் கண்ணில் இல்லை தூக்கம்
என் பாதை சரியா இது காலம் செய்த பிழையா
என் நெஞ்சம் எங்கும் எதோ ஆதங்கம்

எழுதுகிறேன் ஒரு கடிதம்…

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 5:36 pm
Tags: , ,

முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே!
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

வானத்து மலரே! வையத்து நிலவே!
வாழ்க்கையின் பொருளே வா!
எழுதுகிறேன் ஒரு கடிதம்.
மலடியின் மகளே மகள் எனும் கனவே
மடியினிலே நீ வா!
எழுதுகிறேன் ஒரு கடிதம்.

பாறையில் மலர்ந்த தாமரையே!
இரவினில் எழுந்த சூரியனே!
எழாமலே எழும் நிலா நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.

முந்நூறு நாள் கற்பத்திலே வாராத பெண் நீயடி!
எந்நாளுமே நான் பொம்மைதாய் என்றாலும் தாய்தானடி!
உலாவும் வானம்பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே!
புறாவைப்போல சாந்தமாய்
பண்பாடு போற்று கண்ணே!
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெரும் சுகம் நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி!
என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி!
குலாவும் அன்புக்கோகிலம் எங்கேயும் கானம் பாடு!
கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு!
நல்லவளாக நடை போடு! வல்லவளாகிட தடை ஏது!
விழாமலே விழும் மழை நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.

பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம்  தான் வாழ்வடி!
கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி!
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது!
பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது!
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி!
தொடாமலே சுடும் கனல் நீயே!

வானத்து மலரே! வையத்து நிலவே!
வாழ்க்கையின் பொருளே வா!
மலடியின் மலடியின் மகளே மகள் எனும் கனவே
மடியினிலே நீ வா!
பாறையில் மலர்ந்த தாமரையே!
இரவினில் எழுந்த சூரியனே!
எழாமலே எழும் நிலா நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம்.

நட்ட நடு ராத்திரியை. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 5:27 pm
Tags: , ,

நட்ட நடு ராத்திரியை நீ பட்ட பகல் ஆக்கிவிட்டாய்
என் விழியில் நீ விழுந்து
என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்
கொட்ட கொட்ட நான் முழித்து
கிட்ட தட்ட தூங்கி விட்டேன்
என் கனவில் நீ நுழைந்து
எனை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்
கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள்
என்னை சுட்டு பொசுக்குதடா
பற்றிக் கொண்டதென் மனசு
எண்ணை ஊற்றும் உன் வயசு
தீ பிடித்து எரியுதடா

பூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை
உன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை
கடனாய் கொடுப்பாய் உடலை
உன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன்
கண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன்
உனை நான் எனதாய் உணர்ந்தேன்
விழி ஒரமாய் பல கனவு
எனை மொய்க்குதே தினம் இரவு
உறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில்
கனவில் வந்திடு

உன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும்
கண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும்
வயதோ கொதியாய் கொதிக்கும்
உன் நினைவுகளோ என்னில் படை எடுக்கும்
என் விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும்
இரவில் உயிரே வெடிக்கும்
கடிகாரமாய் எந்தன் மனது
உன்னை சுற்றியே வரும் பொழுது
பிரியமானவா தனிமை நீக்க வா
தனிமை நீங்க வா

August 31, 2010

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 10:08 am

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன்
பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது அதன்
பேர் என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதலென உயிரும் சொன்னது அன்பே
காதலென உயிரும் சொன்னது அன்பே

என் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன் இடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே
காதலென உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையா இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்க்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்ததேனடா
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்

July 4, 2010

வெயிலும் இல்லை . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 6:37 pm
Tags: , ,

வெயிலும் இல்லை
ஓர் மழையும் இல்லை
விழியில் கண்டேன்
நான் வானவில்லை
குளிரும் இல்லை
ஓர் அனலும் இல்லை
காய்ச்சல் கொண்டேன்
I Love You….

நட்பு இல்லை
ஓர் உறவும் இல்லை
உணர்ந்து கொண்டேன்
நான் வேறுஒன்றை
நெருங்கவில்லை
நான் விலகவில்லை
புரியவில்லை
I Love You…

நடை உடை பாவனை
தோற்றமும் மாறுதே

இது தான் காதலோ
இடையினில் ஒரு சுகம்
தடை என தோன்றுதே

இதுவும் காதலோ
முன்னே நீ வந்தாளே
பெண்ணே
உயிரோடு சாகிறேன்

கதவினை திறந்தொரு
வெளிச்சமும் நுழைந்திட
கனவாய் தோன்றுதே
உலகத்தில் எல்லை வரை
உன்னுடனே நடந்திட
உயிரும் வேண்டுதே

கண்ணாலே பார்த்தாலே கண்ணே
உயிர்தெழுந்து  வாழ்வேன்
I Love You…

Next Page »

Create a free website or blog at WordPress.com.